/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/110_27.jpg)
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாவதால் கர்நாடகாவின் கோலார் பகுதியில் பல மாதங்களாகப் படப்பிடிப்பை நடத்தினர். இதனிடையே சென்னையிலும் படப்பிடிப்பைத் தொடர்ந்தனர்.
இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பின் மேக்கிங் வீடியோ முன்னதாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படம்2024 ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. சமீபத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர் டப்பிங் பணிகளை முடித்தனர். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து படக்குழு தெளிவாக ஒரு அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)