ADVERTISEMENT

"தோத்த காண்டு மொத்தத்தையும் பாட்டுல இறக்கிட்டாப்ல" - கமல் குறித்து நடிகை கஸ்தூரி கருத்து

06:17 PM May 12, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வரும் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் விக்ரம் படத்தில் கமல் எழுதி பாடியுள்ள பத்தல பத்தல பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்பாடல் யூடியூபில் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இருப்பினும் இந்த பாடல் மத்திய அரசை நேரடியாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அந்த பாடலில் இடம்பெற்றுள்ள “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே சாவி இப்போ திருடன் கையிலே" என்ற வரிகள் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் இப்பாடல் குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல் வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் வரிகளில் இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில் தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT