ADVERTISEMENT

"கண்கள் குளமாகின" - 'ஜெய் பீம்' படம் குறித்து நடிகர் கமல் ட்வீட்!

03:00 PM Nov 02, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் தா.சே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'ஜெய் பீம்' படத்தில் நடித்துள்ளார். இதில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், லியோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழங்குடி மக்களின் பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்கும் வக்கீலாக நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், 'ஜெய் பீம்' படம் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் படத்தை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் 'ஜெய் பீம்' படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமாகின. பழங்குடியினரின் இன்னல்களை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் தா.சே ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்கு குரலற்றவரின் குமுறல்களை கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT