ADVERTISEMENT

"என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு... " கமல் ட்வீட்!

03:32 PM Dec 31, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தாண்டில் கரோனா, ஊரடங்கு, வேலையின்மை என பல பிரச்சனைகளை சந்தித்தாலும், இவை அனைத்தையும் மறந்து பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். 2021 ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று பலரும் தங்களின் கடந்த வருடத்தை நினைவு கூர்ந்தும், வரவிருக்கும் புதிய ஆண்டிற்கு வாழ்த்து கூறியும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கமல் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற 'விஷ் யூ ஹாப்பி நீயூயர்' என்ற பாடலை இசைஞானி இளையராஜா பாடி வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரின் டீவீட்டை ரீ ட்வீட் செய்த கமல்ஹாசன்,"இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன். இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு ஹாப்பி நீயூயர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT