ADVERTISEMENT

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கரோனா!

03:24 PM Mar 24, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்தது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கியுள்ள சூழலில், மீண்டும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இது, கரோனா பரவலின் இரண்டாம் அலையாக மாறிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு இன்று (24.03.2021) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமீர்கானின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அமீர்கானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்தியுள்ள அமீர்கான், தற்போது நலமாக உள்ளார். சமீபத்தில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்" எனக் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT