RS Prasanna to direct Salman Khan under Aamir Khan Productions

பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில்ஒருவராகவலம் வருபவர்ஆமீர்கான். ‘ஆமீர்கான் புரொடக்சஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் பலபடங்களைத்தயாரித்துள்ள ஆமீர்கான்.அடுத்ததாகசல்மான் கானை வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சல்மான்கானிடம் ஆமீர்கான் பேச்சுவார்த்தைநடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இப்படத்தை தமிழ்ப் படஇயக்குநர்ஆர்.எஸ். பிரசன்னா இயக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. முன்னதாகஆர்.எஸ். பிரசன்னா ஸ்போர்ட்ஸ் ட்ராமாஜானரில் ஒரு கதையை எழுதி ஆமீர்கானிடம்சொல்லியுள்ளார். கதையைக் கேட்ட ஆமீர்கான், இதில் தன்னை விடசல்மான்கான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்துசல்மான்கானை அணுகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சல்மான்கான் தரப்பு இதற்குஎன்ன பதிலளித்தார்கள் என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் உறுதியாகும் பட்சத்தில் ஆமீர்கான் தயாரிப்பில் முதல் முதலில் நடிக்கவுள்ளார் சல்மான்கான்.

Advertisment

2013ல்,லேகா வாஷிங்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'கல்யாண சமையல் சாதம்' படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர்இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா. இப்படத்தை தொடர்ந்துசின்மயா மிஷனின்நிறுவனர் சுவாமி சின்மயானந்தாவின் வாழ்க்கையை 'ஆன் ஏ குயிஸ்ட்' (On a Quest) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு படம் எடுத்தார். பின்பு'கல்யாண சமையல் சாதம்'படத்தையேஇந்தியில்'சுப் மங்கள் சாவ்தான்' என்ற தலைப்பில் ரீமேக் செய்தார்.2017ல்வெளியான இப்படம் பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்றது.