Advertisment

அசின் என்னுடன் நடிக்க மறுத்தார்; பிரபுதேவா என்ன செய்தார் தெரியுமா? இம்சை அரசன் டாக்ஸ் #1

'வடிவேலு' தமிழ் சினிமா தந்த சிரிப்பு மருத்துவர். ஆம், சிரித்தால் நோய் தீர்ந்து போகுமென்றால் அந்த சிரிப்புக்கு காரணமானவர்களை எப்படி அழைப்பது? இந்த பெயரை விட்டுவிட்டு. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமைவை தன்னுடைய தனித்துவமான உடல்மொழியால் வசீகரித்து வருகிறவர். அவருடைய இந்த சிரிப்பு பயணத்தில் அவர் கடந்து வந்த பாதைகளை நம்முடைய இதழில் தொடராக எழுதி வந்தார். அதில் நடிகைகள் காமெடியன்களுடன் நடிக்க தயக்கம் காட்டுவதை பற்றி அவர் கூறும்போது,

Advertisment

yh

சில கதாநாயகிகள் ‘"காமெடியன் கூட நடிக்கிறதா?'னுட்டு யோசிப்பாக. சில பேரு கட்-அண்ட் ரைட்டா ‘"மாட்டேன்'ம் பாக. பெரிய கம்பெனி, பெரிய டைரக்டரு, கதக்கி அவசியம்னா நடுச்சுருவாங்க. சுந்தர்.சி.படத்துல சிரிப்புக் காட்சிகள் நெறஞ்சு கெடக்கும். ‘"கிரி' படத்துல கதா நாயகி ரீமாசென்ன நான் அடைஞ்சே தீரணும்னு ஆசப்படுற கேரக்டரு. அந்த மேடம் என்கூட பாரபச்சங்காட்டாம நடுச்சாங்க. அதுலயும் நான் பண்ற காமெடிக்கெல்லாம் சரியா ரியாக்ட் பண்ணி அசத்துனாங்க. ‘"தலைநகரம்' படத்துல கதா நாயகி ஜோதிர்மயிய ஃபுல் ரொமான்ஸ் ஸோட காதலிப்பேன். அதனால் பெரும்பாலான காட்சிகள்ல நானும் ஜோதிர்மயியும் சேந்துவர்ற மாதிரி வச்சாரு டைரக்டர் சுராஜு.

"புலிகேசி' படத்துக்கு கதாநாயகியா கேட்டப்ப... பலபேரு "என்னா... கிண்டலா?'ங்கிற ரேஞ்சுக்கு ஜகா வாங்கிட்டாங்க. சில பேருக்கு நடிக்க விருப்பம் இருந்தும் கூட "என்னாது... காமெடியன் கூட நடிக்கப் போறீகளாக்கும்? உருப்பட்டாப்லதான்'னு சொல்லி கெடுத்து விட்டுட்டாய்ங்க. தேஜாஸ்ரீகிட்ட கேட்ட தும் ஒடனே ஓ.கே. சொல்லீட்டாரு. ‘"போக்கிரி' படத்துல அசின் கூட எனக்கு டூயட்டே இருந்துச்சு. ஆனா.. என்கூட நடிக்க அசின் தயக்கம் காட்டினதும் தனித்தனியா எடுத்து மேச்சுப்பண்ணினாரு பிரபுதேவா. "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்துல ஒத்தப்பாட்டுக்கு என்கூட ஸ்ரேயாவ ஆடக் கேட்டப்ப... எந்த தயக்கமும் காட்டாம நடுச்சாங்க. "காமெடியன் கூட சேந்து நடிக்க கதாநாயகிகள் தயங்குறத தப்பூன்னு சொல்லமாட்டேன். ‘காமெடியன் கூடவெல்லாம் ஜோடிபோட்டா அப்புறம் அடுத்தடுத்த படங்களுக்கு பெரிய ஹீரோக்கள் கூப்புடுவாங்களோ... மாட்டாங்களோ'ங்கிற ஞாயமான கவலைலதான் அவுங்க மறுக்குறாங்க. அவுங்களோட அந்த தொழில் தர்மத்துல இருக்க ஞாயத்த தப்பா நெனைக்கலாமா? என்று முடித்தார் வடிவேலு.

இதற்கு அடுத்த பகுதி #2

vadivelu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe