ADVERTISEMENT

உருவக் கேலியால் மனமுடைந்த குழந்தை - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை : 08

03:07 PM Nov 02, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

பள்ளிகளில் சக மாணவ, மாணவிகளிடையே நடைபெறும் உருவக் கேலி, கிண்டல்களால் ஏற்படும் மன உளைச்சலைகளைப் பற்றியும் அதனால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் குறித்தும் நம்மோடு குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

நல்ல துறுதுறுவென இருந்த குழந்தை, திடீரென கதவை சாத்திக் கொண்டு இருந்து விடுகிறான். டிவி பார்ப்பதில்லை, யாருடனும் பேசுவதில்லை, சாப்பிடுவதில், விளையாடுவதில் எந்த ஒன்றிலுமே விருப்பமே காட்டுவதில்லை என்றிருப்பதை கவனித்த பெற்றோர் கவுன்சிலிங் அழைத்து வந்திருந்தார்கள். நான் பேசிய போதும் பெருசாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. வேண்டா வெறுப்பாகவே பதில் அளித்தான். தொடர்ச்சியாக பேசியபோது அந்த குழந்தைக்கு பேய் படங்கள் மிகவும் விருப்பமானது என்பது தெரிய வந்தது.

தினமும் ஒரு பேய் படம் பார்த்து அது குறித்து எனக்கு சொல்ல வேண்டும் என்று ஆக்டிவிட்டி கொடுத்தேன். எந்த படம் வேண்டுமானாலும் ஓக்கே ஆனால் காஞ்சனா வேண்டாம் என்று சொன்னது. ஏன் என்றதற்கு சரத்குமார் கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் என்றபோது தான் ஏதோ சிக்கல் இருப்பதை உணர முடிந்தது. தொடர்ச்சியாக கேள்வி கேட்டபோது, எங்கள் வீடு இருக்கும் பகுதியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர் சிலர் என்னை பெண் போல இருப்பதாகவும், அதே போல நடப்பதாகவும் தொடர்ச்சியாக கிண்டலடிக்கிறார்கள். அதனால் எனக்கு அந்த பெண்ணாகயிருந்து ஆணாக மாறும் கேரக்டர் பிடிக்கவில்லை என்றான்.

குழந்தைக்கு ஹார்மோன் மாற்றம் நாள் எடுத்துக் கொண்டது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அதை வைத்து கிண்டல் அடிப்பதை தாங்கிக் கொள்ளாமல் தான் வெறுப்பு நிறைந்த குழந்தையாகவும், எதன் மீதும் அக்கறையில்லாமல் மாறியிருக்கிறது என்பதை புரிந்துகொண்டு கிண்டலடிப்பவர்களை நாம் மாற்ற முடியாது. அந்த கிண்டலை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நமது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தினமும் கண்ணாடியைப் பார்த்து பேசிப்பழக ஒரு பயிற்சி கொடுத்தேன். அது பயனளித்தது.

உண்மையில் அந்த குழந்தை பாலின மாற்றம் எல்லாம் அடைகிற ஹார்மோன் மாற்றப் பிரச்சனை கூட இல்லை. கொஞ்சம் மிருதுவான தன்மையுடன் இருந்ததற்கே உருவக்கேலி கிண்டல் செய்ததால் இப்படியான மனநிலைக்கு மாறியிருக்கிறது. எனவே குழந்தைகளை யாரும் உருவக்கேலி கிண்டல் செய்யாமல் இருங்கள். அப்படி நடைபெற்றாலும் அதை கடந்து வருவதற்கு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT