Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி -3

Published on 15/07/2019 | Edited on 18/07/2019

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மகனின் 8 ஆயிரம் கோடி ஊழல்! (CAYMAN ISLANDS FDI SCAM)
 

bjp scams



பிரதமர் மோடிக்கு நெருக்கமான பாஜகவின் கையாள் என்று சொல்லுமளவுக்கு நெருக்கமான அஜித் தோவலின் மகன் விவேக் ஒரு நிதி நிறுவனத்தை தொடங்கினார். அதாவது பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட 13 நாட்களுக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கினார். இந்த நிறுவனத்துக்கு 2017-18 ஆம் ஆண்டு மட்டும் கேய்மேன் தீவுகளில் இருந்து அன்னிய நேரடி மூலதனமாக 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு நிதி குவிந்தது. இந்தத் தொகை மலைக்க வைக்கும் அளவுக்கு பெரியது. அதாவது 2000மாவது ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்த மொத்த நேரடி அன்னிய மூலதனத்துக்கு நிகரானது ஆகும். இந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குனரில் ஒருவர் டான் டபுள்யு இபேங்க்ஸ். இவர் பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட ஊழல்வாதிகளின் பட்டியலில் இடம்பெற்றவர்.


சீட்டுக்கம்பெனி ஊழல் (சத்தீஷ்கர்) - CHIT-FUND SCAM (Chhattisgarh)
 

bjp scams


2015 முதல் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சத்தீஷ்கர் மாநிலம் முழுவதும் 111 சீட்டுக்கம்பெனிகள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 697 முதலீட்டாளர்களை ஏமாற்றி, 484 கோடியே 39 லட்சத்து, 18 ஆயிரத்து 122 ரூபாயை சுருட்டின. விவசாயிகளும், ஏழை ஜனங்களும் ஏமாற்றப்பட்ட இந்த ஊழலில் ஒருவருக்கும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்ட ஏழை மக்களின் பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்று தங்களால் சொல்ல முடியாது என்று பாஜக தலைவர் கூறிவிட்டார்கள்.



அரசுப் பள்ளிகளை மூடியதில் ஊழல் (ராஜஸ்தான்) -CLOSURE OF GOVT SCHOOLS (RAJASTHAN)
 

bjp scams



ராஜஸ்தான் அரசு 17 அரசுப் பள்ளிகளை மூடியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேற நேர்ந்தது. குறைவான மாணவர்கள் வருகையே பள்ளிகள் மூடப்பட்டதற்கு காரணம் என்று அரசு கூறியது. ஆனால், உண்மை அதுவல்ல. தனியார் பள்ளிகளின் லாப நோக்கத்திற்காகவே அந்தப் பள்ளிகளை அரசு மூட உத்தரவிட்டது. பள்ளிகளை விட்டு நின்ற பிள்ளைகளுக்கு தனியார் பள்ளிகளில் சேருவது ஒன்றே வழியாக இருந்தது. இல்லையென்றால் படிப்பைத் தொடராமல் வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டியதாயிற்று. இது கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது.


ஹெலிகாப்டர் ஊழல் (சத்தீஷ்கர்) -CHOPPER SCAM (CHHATTISGARH)

 

bjp scams


2007 ஆம் ஆண்டு சத்தீஷ்கர் அரசுக்காக அகஸ்டா 109 பவர் இ ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் குறிப்பிட்ட மாடல் ஹெலிகாப்டரை வாங்குவதற்கு சாதகமாக அதே ஆண்டு முறையற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டது. அரசு விரும்பிய அம்சங்கள் உள்ள ஹெலிகாப்டர்களை வேறு சில கம்பெனிகளும் தயாரித்த நிலையில் 30 சதவீதம் கமிஷன் கொடுத்து அதாவது சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது.



நிலக்கரி ஊழல் (ஜார்கண்ட்) -COAL SCAM (JHARKHAND)
 

bjp scams



ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்க உரிமையை குறிப்பிட்ட தனியார் கம்பெனிக்கு வழங்குவதற்காக மோடி அரசின் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர் திலிப் ராய் அரசு விதிகளை தளர்த்தினார். இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதிஹ் மாவட்டத்தின் பிரமதிஹா நிலக்கரி சுரங்கப் பகுதியில் அந்தக் கம்பெனிக்கு உரிமை வழங்கப்பட்டது. காஸ்ட்ரான் டெக்னாலஜீஸ் என்ற அந்த நிறுவனம் இந்த உரிமையைப் பெற தேவையான வழிகாட்டு முறைகளை பூர்த்தி செய்யாவிட்டாலும் இந்த உரிமை விதிகளை மீறி வழங்கப்பட்டது.


சிதுர்ஜியா ஊழல் (உத்தரகாண்ட்) -CITURGIA SCAM (UTTARAKHAND)
 

bjp scams


உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் ரமேஷ் பொகாரியால் நிஷாங்க் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார். சிதுர்ஜியா பயோகெமிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை வீடுகட்டும் கம்பெனி ஒன்றுக்கு சாதகமாக வழங்க முதல்வர் ஏற்பாடு செய்தார். அந்த கம்பெனியின் ரிஷிகேஷ் வீடுகட்டும் திட்டத்திற்காக 30 ஏக்கர் நிலத்தை மாற்றிக்கொடுத்து முதல்வர் கோடிக்கணக்கில் லாபம்பெற்றார்.


கடலைமிட்டாய் ஊழல் (மகாராஸ்டிரா) -CHIKKI SCAM (MAHARASHTRA)
 

bjp scams


பாஜக தலைமையிலான மகாராஸ்டிரா அரசின் 206 கோடி ரூபாய் ஊழல் அம்பலமாகியது. பாஜக அமைச்சரான பங்கஜா முண்டே பள்ளிக் குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் வழங்குவதற்கான டெண்டர் விதிகளை தளர்த்தி, அதாவது, டெண்டரே விடாமல் குறிப்பிட்ட கம்பெனிக்கு ஒப்பந்தம் கொடுத்தார். இதற்காக ஒரே நாளில் 24 தீர்மானங்களை அவர் நிறைவேற்றியிருக்கிறார். 3 லட்சத்திற்கு மேல் யாருக்கேனும் ஒப்பந்தம் கொடுக்க வேண்டுமென்றால் ஆன்லைனில் டெண்டர் கோர வேண்டும் என்பது விதியாகும்.

 

முந்தைய பகுதி:

ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி2

 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.