ADVERTISEMENT

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி -7

07:05 PM Aug 02, 2019 | santhoshb@nakk…

நிலக்கடலை ஊழல் (குஜராத்)- GROUNDNUT SCAM (GUJARAT)

ADVERTISEMENT

ADVERTISEMENT


குஜராத்தில் விவசாயிகளிடம் இருந்து நிலக்கடலை கொள்முதல் செய்த வகையில் அந்த மாநில அரசு 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நிலக்கடலையை எண்ணெய் ஆலை உரிமையாளர்களுக்கு விற்றுவிட்டு, மணலையும் கூழாங்கற்களையும் நிரப்பி ஏமாற்றியது கண்டறியப்பட்டது. ஸ்டாக் வைத்திருந்த குடோன்களில் தீப்பிடித்த சம்பவங்களும் நிகழ்ந்தன.


குஜராத்தில் அன்பளிப்பு ஊழல்- GIFT SCAM (GUJARAT)

2013 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் காந்தி நகரில் கிஃப்ட் நகரம் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுக்கணக்குத்துறை இதை கண்டுபிடித்து வெளியிட்டது. 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம் மாநில அமைச்சரவையால் 1 ரூபாய்க்கு ஒதுக்கப்பட்டது. நிலத்தை பெற்றவர்கள் அரசின் அனுமதி இல்லாமல் நிலத்தை குத்தகைக்கு விடவும் அனுமதிக்கப்பட்டார்கள்.

கான்கிரீட் ரோடு போட்டதில் ஊழல் (கோவா)- GSIDC CONTRACTOR SCAM (GOA)

கோவாவில் மிராமல் டோனா பவ்லா கான்கிரீட் சாலை அமைக்க 72 கோடியே 59 லட்சம் ரூபாயில் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் முழுமையும் ஜிஎஸ்ஐடிசி கம்பெனியின் எம்.வி.ராவ் என்பவருக்கு காண்ட்ராக்ட் விடப்பட்டது. இது ஏனோதானோவென்று டென்டர் விடப்பட்டது. 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம், பல முறை கெடு நீடிக்கப்பட்டு 2016 ஆகஸ்ட் மாதம் முடிக்கப்பட்டது. ஆனால், ஒரு ஆண்டுக்குள் இந்த சிமெண்ட் ரோடு பல இடங்களில் பிளந்தது. அந்த அளவுக்கு மோசமான கலவையில் இந்த சாலை போடப்பட்டிருந்தது.


ஆலோசனைக்கே 10 கோடி ரூபாய்- CONSULTANT SCAM (GOA GSIDC)


ஏற்கெனவே ஊழல் புகாரில் சிக்கிய ஜிஎஸ்ஐடிசி கட்டுமானக் கம்பெனிக்கு மீண்டும் மண்டோவி பாலம் கட்டும் காண்ட்ராக்டை கொடுக்க அப்போதைய முதல்வர் மனோகர் பாரிக்கர் முயன்றார். இந்தத் திட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக மட்டும் பிளாக் லிஸ்ட்டில் உள்ள எஸ்.என்.போபே அண்ட் அசோசியேட்ஸுக்கு 10 கோடி ரூபாயை அரசு வாரிக்கொடுத்தது. பின்னர், இந்தத் திட்டத்திற்காக இற்றுப்போன உருக்குக் கம்பிகளை பயன்படுத்தியதாகவும் புகார்கள் வந்தன.


குஜராத் முதல்வர் மோடியின் பெட்ரோலிய ஊழல்!- (GSPC SCAM).

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த காலத்தில் 2005 ஜூன் 26 ஆம் தேதி குஜராத் மாநில பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் என்ற கம்பெனியை அறிவித்தார். இந்தக் கம்பெனி கே.ஜி. படுகையில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பதை கண்டறிந்தது என்றும், அதன் மதிப்பு 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் அறிவித்தார். இதற்காக ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும், வர்த்தகரீதியில் எரிவாயு உற்பத்தி 2007 ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் மோடி அறிவித்தார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, 2009 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி ஜிஎஸ்பிசியால் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கு 8 ஆயிரத்து 465 கோடி செலவாகும் என்று அறிவித்தது. இது முதல்வர் மோடி அறிவித்ததைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். அதுமட்டுமின்றி, இயற்கை எரிவாயு இருப்பு என்று மோடி அறிவித்ததைக் காட்டிலும் 90 சதவீதம் குறைவாகவே இருப்பு இருப்பதாக இந்த நிறுவனம் அறிவித்தது. தனது செலவுக்காக இந்த நிறுவனம் 15 பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து 2015 ஆம் ஆண்டு மார்ச் வரை 19 ஆயிரத்து 716 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கியிருக்கிறது. ஆனால் எரிவாயு உற்பத்தியை இதுவரை தொடங்கவில்லை.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT