டெல்லி நகராட்சி பென்சன் ஊழல்!- MCD PENSION SCAM (DELHI).

ATHANUR CHOZHAN THODARGAL BJP CORRUPTION A TO Z

டெல்லி மாநிலத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் ஆண்டுக்கு 244 கோடி ரூபாய் பென்சனாக கொடுத்ததில் ஊழல் நடைபெற்றது. பென்சன் கொடுத்ததற்கு எந்தவிதமான ஆவணங்களும் இல்லை. மத்திய தகவல் ஆணையம் இந்த ஊழலை அம்பலப்படுத்தியது. விண்ணப்பங்களை எந்த பரிசீலனையும் செய்யாமல் சட்டவிரோதமாக ஓய்வூதியம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Advertisment

மருத்துவ கவுன்சில் ஊழல்!- MCI SCAM (KERALA).

ATHANUR CHOZHAN THODARGAL BJP CORRUPTION A TO Z

Advertisment

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர் டெல்லி தொழிலதிபர் சதீஷ் நாயரிடம் 5.60 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார். வர்கலா மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்க இந்திய மருத்துவ கவுனிசிலிடம் அனுமதி பெற்றுத் தருவதாக கூறி இந்த தொகையை பெற்றிருக்கிறார். பின்னர் மருத்துவக் கல்லூரியை ஆய்வு நடத்த கவுன்சில் அதிகாரிகள் வந்தபோதுதான் அந்த பாஜக தலைவர் பணத்தை கவுன்சிலுக்கு கொடுக்கவில்லை என்று தெரிந்தது. இதுதொடர்பாக பாஜக தலைவர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டது.