ADVERTISEMENT

"ஐபிஎல்-க்கு பிறகு அணி சோர்வாக இருக்கிறது" - தோல்விக்கு பிறகு உண்மையை உடைத்த பும்ரா!

12:50 PM Nov 01, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2021ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டிகள், நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் படுதோல்வியடைந்து, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் கட்டத்தில் உள்ளது.

இந்தநிலையில், தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, இந்திய அணி சோர்வாக இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணி சோர்வாக இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பும்ரா கூறியதாவது, "நிச்சயமாக. சில நேரங்களில் நமக்கு ஓய்வு தேவை. குடும்பத்தைப் பிரிந்து இருந்துவருகிறோம். ஆறுமாதங்களாக தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருக்கிறோம். இவை அனைத்தும் சில சமயங்களில் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் களத்தில் இருக்கும்போது, அதையெல்லாம் நாங்கள் நினைப்பதில்லை. கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதும், குடும்பத்தை நீண்ட நாட்கள் பிரிந்திருப்பதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பிசிசிஐயும் எங்களை சௌகரியமாக வைத்துக்கொள்ள தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தது. இது கடினமான நேரம். ஒரு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் ஏற்படும் சோர்வு, மன சோர்வு போன்றவை ஊடுருவுகிறது." இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலிருந்து, இந்திய வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT