bumrah

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில்இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக அகமதாபாத் மைதானத்தில், கடந்த 24 ஆம் தேதி தொடங்கி இரண்டே நாட்களில் முடிந்தது. இப்போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

Advertisment

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, மார்ச் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தநிலையில், இந்தப் போட்டியிலிருந்து பும்ரா விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்குப் பதிலாக சிராஜ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்தியா, இங்கிலாந்துடனான கடைசிப் போட்டியில் வென்றாலோ அல்லது சமன்செய்தாலோமட்டுமே,உலகக் கிரிக்கெட்சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும். முக்கியமான ஆட்டத்தில் பும்ராஇல்லாமல், இந்தியஅணி களமிறங்கவுள்ளது.