ADVERTISEMENT

இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் - தனது உலக சாதனையை தானே முறியடித்த சுமித் ஆன்டில்!

05:04 PM Aug 30, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று காலை அவனி லெகாரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். பாராஒலிம்பிக்கில் இந்திய பெண் வென்ற முதல் தங்க பதக்கம் இதுவாகும். மேலும் இது தற்போது நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்க பதக்கமாகவும் பதிவானது.

இந்தநிலையில் இந்த பாரா ஒலிம்பிக்சில் இந்தியா தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் (எஃப் 64) சுமித் ஆன்டில் உலக சாதனையோடு தங்க பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இந்த போட்டியில் இரண்டாவது வாய்ப்பில் சுமித் ஆன்டில் 68.55 மீட்டருக்கு ஈட்டியை அசத்தினார்.

இதன்மூலம் தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார் சுமித் ஆன்டில். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் அவர் 62.88 மீட்டர் ஈட்டி எறிந்ததே இதுநாள் வரை உலக சாதனையாக இருந்தது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT