ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 10மீ ஏர் பிஸ்டல் எஸ் எச்1 துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில், இந்திய வீரர் சிங்கராஜ் அதானா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இது இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் இரண்டாவது வெண்கலம் ஆகும்.
இந்தியா இந்த பாராஒலிம்பிக்கில் இதுவரை, 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என எட்டு பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.