ADVERTISEMENT

தொடர் தோல்வி; கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இலங்கை அரசு

01:06 PM Nov 06, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்வியை சந்தித்ததால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றை அடைந்துள்ளன. இதில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. மேலும், கடந்த 33வது லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய இலங்கை அணி 55 ரன்களில் சுருண்டு படுதோல்வியை தழுவியது. இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடர் தோல்வியின் எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கலைத்துள்ளார்.மேலும், அவர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக தலைவராக அர்ஜூனா ரணதுங்கா நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT