Skip to main content

மேத்யூஸ்-க்கு அவுட்; கங்குலிக்கு நாட் அவுட் -  2007ல் நடந்த சம்பவம்!

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Angelo Mathews timed out wicket Sourav Ganguly 2007 SA Test match incident

 

கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் ஆட்டமிழந்து சென்ற 2 நிமிடங்களுக்குள் அடுத்த வீரர் களத்திற்குள் இறங்கி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது விதி. அதற்கு மேல் தாமதமானால் எதிரணி கேப்டன் அப்பீல் செய்து அந்தப் புதிய வீரரை பேட்டிங் செய்யாமலேயே ஆட்டமிழக்கச் செய்யலாம். 

 

உலகக் கோப்பை 2023ன் 38 ஆவது லீக் ஆட்டம் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நேற்று (06.11.2023) நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி  இலங்கை அணி பேட்டிங்கில் களம் இறங்கியது. 

 

Angelo Mathews timed out wicket Sourav Ganguly 2007 SA Test match incident

 

இந்தநிலையில், அணியின் ஸ்கோர் 135 - 4 என்று இருந்தபோது, அந்த அணியின் அனுபவ வீரர் மேத்யூஸ் களம் இறங்கினார். ஆனால் சரியான ஹெல்மெட் எடுத்து வராததால், வேறு ஹெல்மெட்டை எடுத்து வரச் சொல்லி பெவிலியனை நோக்கி கையசைத்தார். இதில் 3 நிமிடங்கள் ஆகிவிட்டது. இதனால் எதிரணி கேப்டன் ஷகிப் அவுட் என அப்பீல் கோரினார். ஆலோசித்த அம்பயர்கள் அவுட் என அறிவித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த மேத்யூஸ் விளையாடாமலேயே அவுட்டாகி வெளியேறினார். உலக கிரிக்கெட்டில் இந்த விதி இருந்தாலும் இதுவரை பயன்படுத்தப்பட்டது கிடையாது. எனவே மேத்யூஸ் இந்த முறையில் அவுட் ஆன முதல் வீரரானார்.

 

இது பெரும் விவாதம் ஆகியுள்ள நிலையில், 2007ம் ஆண்டு கேப்டவுன் மைதானத்தில் நடந்த இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான டெஸ்ட் போட்டியின் போது, சவுரவ் கங்குலி 6 நிமிடங்கள் கழித்தே பேட் செய்ய மைதானத்திற்கு வந்தார். ஆனால், அவருக்கு அவுட் கொடுக்காமல் அவர் பேட் செய்ய அனுமதிக்கப்பட்டார். இது தற்போது வைரலாகி வருகிறது. 

 

Angelo Mathews timed out wicket Sourav Ganguly 2007 SA Test match incident

 

கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் துவக்க வீரரான வாஸிம் ஜாஃபர், 2.2 ஓவரில் தனது விகெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அன்று ஆட வரவேண்டியவர் சச்சின் டெண்டுல்கர். ஆனால், இந்தப் போட்டியின் மூன்றாவது நாளில் சச்சின் அனுமதித்த நேரத்தைக் கடந்து மைதானத்தில் இருந்ததால், அவர் அடுத்த நாள் 10.48 மணிக்கே மைதானத்திற்குள் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 

 

அதன்படி வாஸிம் ஜாஃபர் 10.43க்கு தனது விக்கெட்டை இழக்க சச்சின் மைதானத்திற்குள் வர முடியாத அந்த சூழலில் ஆட வேண்டியது வி.வி.எஸ். லட்சுமணன். ஆனால், அவர் அப்போது குளித்துக்கொண்டிருந்ததால் அவராலும் மைதானத்திற்கு வர முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து சவுரவ் கங்குலி அவசர அவசரமாக தனது உடையை மாற்றிக்கொண்டு மைதானத்திற்கு வந்தார். ஆனால், அவர் மைதானத்திற்கு வர ஆறு நிமிடங்கள் ஆனது. இதனால், அப்போது அவருக்கு டைம் அவுட் முறைப்படி அவுட் கொடுக்கப்படலாம் என வர்ணனையாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர். 

 

Angelo Mathews timed out wicket Sourav Ganguly 2007 SA Test match incident

 

அப்போது ஆட்ட நடுவரான ஹார்பெர், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனான கிரேம் ஸ்மித்திடம் நிலைமையை விளக்கினார். அதனை ஏற்ற கிரேம் ஸ்மித் கங்குலியை டைம் அவுட் முறையில் அவுட் செய்ய அப்பீல் கேட்காமல் அவரைக் களம் காண சம்மதம் தெரிவித்தார். அதன் காரணமாக அன்று ஆறு நிமிடங்கள் தாமதமாக மைதானத்திற்கு வந்தும் டைம் அவுட் ஆகாமல் கங்குலி பேட் செய்தார். இந்த வீடியோவை தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுதான் ‘ஸ்போர்ட் மேன் ஷிப்’ என கிரேம் ஸ்மித் குறித்து பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

‘உனக்கொரு எல்லை உலகத்தில் இல்லை’ - சாதனை படைத்த அஸ்வின்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ashwin who took 500 wickets in Test match

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன. நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார் ஆகியோர் வந்த வேகத்திலேயே தங்களது விக்கெட்களை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றத்தில் இருந்தது. பிறகு ஜோடி சேர்ந்த ஜடேஜாவும், ரோஹித் ஷர்மாவும் அணியின் ஸ்கோரை 33ல் இருந்து 237க்கு கொண்டுவந்தனர். அப்போது ரோஹித் தனது விக்கெட்டை இழக்க அறிமுக ஆட்டக்காரரான சர்பராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜடேஜா 225 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க,  அடுத்தடுத்து வந்த  அஸ்வின் 37(89), துருவ் ஜோரல் 46(104), பும்ரா 26(28) விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 445 ரன்களை எடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. 

இதனைத் தொடர்ந்து, தன்னுடைய முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் க்ராலி மற்றும் டக்கர் இருவரும் இறங்கினர். இந்த நிலையில், ஜாக் க்ராலி 15(28) விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

Next Story

போராடி மேலே வந்த சர்ஃபராஸ் கான்; வருத்தம் தெரிவித்த ஜடேஜா! 

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ravindra Jadeja insta story for sarfaraz khan

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன. நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார் ஆகியோர் வந்த வேகத்திலேயே தங்களது விக்கெட்களை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றத்தில் இருந்தது. பிறகு ஜோடி சேர்ந்த ஜடேஜாவும், ரோஹித் ஷர்மாவும் அணியின் ஸ்கோரை 33ல் இருந்து 237க்கு கொண்டுவந்தனர். அப்போது ரோஹித் தனது விக்கெட்டை இழக்க அறிமுக ஆட்டக்காரரான சர்பராஸ் கான் களத்திற்கு வந்தார். 

ரஞ்சி ட்ராபி போன்ற உள்நாட்டு தொடர்களில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த, 26 வயதான சர்ஃபராஸ் கான், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்க போராடினார். சர்ஃபராஸ் கான், முதல்தர கிரிக்கெட்டில் 45 போட்டிகளில் விளையாடி, 69.85 சராசரி உடன் 3,912 ரன்கள் குவித்துள்ளார். இதில் 14 சதங்களும், 11 அரைசதங்களும் அடக்கம். 

Ravindra Jadeja insta story for sarfaraz khan

இந்த டெஸ்ட் தொடரில் ஸ்ரேயஸ் ஐயர், விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய மூவரும் டெஸ்ட் தொடரை தவறவிட்ட நிலையில், சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவரது ரசிகர்களும், அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என அனைவரும் காத்திருந்தபோது, கடந்த இரு போட்டிகளிலுமே சர்ஃபராஸ் கான் 11 பேர் பெயர் பட்டியலில் இடம் பெறாமாலேயே இருந்தார். 

இறுதியாக நேற்று துவங்கிய மூன்றாவது போட்டியின் 11 பேர் பெயர் பட்டியலில், ‘சர்ஃபராஸ் கான்’ பெயர் இடம் பெற்றது. இவருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே, டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை வழங்கினார். இந்த நிகழ்வை சர்ஃபராஸின் தந்தை நௌஷாத் கான் மற்றும் சர்ஃபராஸின் மனைவி ஆகியோர் ஆனந்த கண்ணீருடனும் நெகிழ்வுடனும் கண்டுகளித்தனர். அப்போது, தனது மகனின் முதல் தொப்பியை தனது கைகளில் எடுத்து முத்தமிட்ட சர்ஃபராஸின் தந்தை, மகனை ஆரத்தழுவினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. பலரும் சர்ஃபராஸ் கானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Ravindra Jadeja insta story for sarfaraz khan

இப்படி பெரும் போராட்டங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் கிடைத்த முதல் வாய்ப்பினை அட்டகாசமாக பயன்படுத்திய சர்ஃபராஸ் கான், களத்திற்கு வந்ததுமே பந்துகளை பவுண்டிரி லைன்களுக்கு விரட்டி அடித்தார். தனது அதிரடியான ஆட்டத்தால் 48 பந்துகளில் தனது முதல் சர்வதேச போட்டியில் முதல் அரை சதத்தை விளாசினார். தொடர்ந்து களத்தில் இருந்த சர்ஃபராஸ் கான் எதிர்முனையில் இருந்த ஜடேஜாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 

ஜடேஜா, 99 ரன்களில் இருந்தபோது, 82வது ஓவரில் 5 வது பந்தை எதிர்க்கொண்டபோது தனது சதத்தை அடைய சர்ஃபராஸ் கானுக்கு சிங்கிள் கால் கொடுத்தார். ஆனால், ஃபீல்டரின் கையில் பந்து இருப்பதைக் கண்டதும் ஜெடேஜா மீண்டும் க்ரீஸினுள் செல்ல, எதிர் முனையில் இருந்து மேலே ஏறிய சர்ஃபராஸ் கானால் க்ரீஸினை நெருங்க முடியவில்லை. அதற்குள் சர்ஃபராஸ் கான் ரன் அவுட் செய்யப்பட்டு 62 ரன்களில் வெளியேறினார். இவரின் ரன் அவுட் இந்திய ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருந்தது. 

Ravindra Jadeja insta story for sarfaraz khan

இந்நிலையில், இதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக ஜடேஜா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “என்னுடைய தவறான அழைப்பால் அவுட் ஆனதற்கு வருந்துகிறேன். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள்” என சர்ஃபராஸ் கானை டேக் செய்து பதிவு செய்தார்.