ADVERTISEMENT

சர்ச்சையில் சிக்கிய ரோஹித் சர்மா: தண்டனை கொடுத்த ஐபிஎல் நிர்வாகம்...

12:04 PM Apr 29, 2019 | kirubahar@nakk…

நேற்று இரவு மும்பை கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா விதிகளை மீறி செயல்பட்டதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 232 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கில், லின், ரஸ்ஸல் என அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய ரஸ்ஸல் 40 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 233 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்தொடங்கிய மும்பை அணி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை அணியில் சிறப்பாக விளையாடிய ஹர்டிக் பாண்டியா 34 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆனார். நடுவர் அவுட் கொடுத்த நிலையில் வெளியே செல்லும்போது 'நான் ஸ்ட்ரைக்கர்' முனையில் இருந்த ஸ்டம்ப்களை பேட்டால் தட்டிவிட்டு சென்றார். அவரின் இந்த செயல் சர்ச்சையானது.

இந்நிலையில் அவர் மைதானத்தில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக அவரின் சம்பளத்திலிருந்து 15 சதவீதத்தை அபராதமாக கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT