ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சென்னை அணி வழக்கம் போல கடைசி ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது.

Advertisment

dhoni fined by ipl board for arguing with umpires

இந்த போட்டியில் கடைசி ஓவரில் பெண் ஸ்டோக்ஸ் வீசிய பந்து சென்னை அணி பேட்ஸ்மேனான சான்ட்னர் இடுப்புக்கு மேல் புல் டாஸாக சென்றது. முதலில் அது நோ பால் என தெரிவித்த நடுவர், பிறகு நோ பால் இல்லை என அறிவித்தார். இதனால் களத்தில் நின்ற ஜடேஜா மற்றும் சான்ட்னர் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தோனி மைதானத்திற்குள் புகுந்து நடுவர்களிடம் அது நோ பால் எனவும் அதற்கு நோ பால் வழங்க வேண்டும் எனவும் வாக்குவாதம் செய்தார். அதன்பின்னும் நடுவர்கள் அதனை ஒப்புக்கொள்ளாத நிலையில் கடைசி பந்தில் சான்ட்னர் சிக்ஸ் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். இதனை தொடர்ந்து விதியை மீறி மைதானத்திற்குள் வந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தோனிக்கு அவரது ஊதியத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">