ADVERTISEMENT

ஆர்.சி.பி. அணியும், மகளிர் கிரிக்கெட்டர்களும் சேர்ந்து விளையாடும் டி20 போட்டி

11:36 AM Apr 05, 2019 | tarivazhagan

ஐ.பி.எல். தொடரில் விளையாடிவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களும், இந்திய சர்வதேச மகளிர் கிரிக்கெட் அணி வீரர்களும் சேர்ந்து டி20 போட்டி விளையாடவுள்ளனர். விராட் கோலி, மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக பெண் கிரிக்கெட் வீரர்கள் கருதப்படுவதில்லை. ஆடுகளம், வாய்ப்புகள், சம்பளம், பாதுகாப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு ஆகியவை ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அளவில் பாதிகூட பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைப்பதில்லை. ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான அதே சவால்களை பெண் வீரர்களால் எதிர்கொள்ள முடியாது என்ற கருத்தை மாற்றும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு சமமான ஃபிட்னஸ் பெண்களுக்கு இல்லை என்றபோதிலும் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக சவால் விடுவதே இந்த போட்டிக்கான நோக்கம்.

இதற்கு முன்பு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணி வீராங்கனைகள் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியுள்ளனர். ஆஸ்திரேலியா அணியின் மகளிர் கிரிக்கெட்டர் ஜோ கோஸ், ஆண்கள் கிரிக்கெட் அணியுடன் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் பிரைன் லாரா விக்கெட்டை எடுத்துள்ளார்.

1994-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் கிரவுண்ட்டில் 50 ஓவர் போட்டி, கிரெக் சாப்பல் தலைமையிலான சர் டொனால்ட் பிராட்மேன் லெவன் மற்றும் சுனில் கவாஸ்கர் தலைமையிலான உலக லெவன் அணிக்கும் இடையே நடைபெற்றது. பிராட்மேன் அணியில் பாபி சிம்ப்சன், டக் வால்டர்ஸ், டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன் ஆகியோரும், உலக லெவன் அணியில் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, கிரேம் போலாக், டேவிட் கோவர், ஜோயல் கார்னர் மற்றும் அப்துல் காடிர் போன்ற வீரர்களும் பங்கேற்றனர்.

ஜோ கோஸ் என்ற ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் வீராங்கனையும் பிராட்மேன் அணியில் விளையாடினார். இந்த போட்டியில் மகளிர் கிரிக்கெட்டர் கோஸ், லாராவின் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோ கோஸ் 1987 முதல் 2000-ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா மகளிர் அணிக்காக 12 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்து அணியை சேர்ந்த சாரா டெய்லர், கேட் கிராஸ், அரான் பிரிண்ட்லி, கிளேர் கானர் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி ஆகியோர் இதற்கு முன்பு ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்களுடன் விளையாடியுள்ளனர்.

தற்போது நடவிருக்கும் இந்த டி20 போட்டி குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீட் தெரிவிக்கையில் "150 கிமீ வேகத்தில் வரும் பந்தோ அல்லது ஸ்டேடியத்தின் அளவைப் பற்றியோ கவலைப்படுவதை நான் விரும்பவில்லை" என கூறியுள்ளார். அதேசமயம் இந்த டி20 போட்டிக்கான இடமும், தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT