virat kohli

Advertisment

கரோனா நோய்த்தொற்று காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பெரிய அளவில் நடைபெறவில்லை. தற்போது ஐசிசி, ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டனும், அதிரடி வீரருமான விராட்கோலி 871 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரோஹித்ஷர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே பாகிஸ்தானின் பாபர் அசாம், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டுபிளஸ்சிஸ் இடம் பிடித்துள்ளனர்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் நியூசிலாந்து வீரர் பவுல்ட் 722 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய வீரர் ஜேஸ்பிரிட் பும்ரா 719 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த முஜீப்ரஹ்மான், ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ், தென்னாப்பிரிக்க வீரர் ரபடா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதல் இடத்திலும், பென்ஸ்டோக்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா இந்த பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளார்.