ADVERTISEMENT

பரபரப்பான ஆட்டத்தில் வெளிச்சமின்மையால் தப்பியது நியூசிலாந்து!

05:10 PM Nov 29, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் முதல் இன்னிங்சில் 345 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய வீரர்களில் ஷ்ரேயாஸ் ஐயர் சதமடித்தார். கில் மற்றும் ஜடேஜா இருவரும் அரை சதமடித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லாதம் 95 ரன்களும், வில் யங் 89 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

இதனால் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆனால் அதிர்ச்சி தொடக்கமாக வில் யங் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த டாம் லாதமும், வில்லியம் சோமர்வில்லேவும் நிலைத்து நின்று நிதானமாக ஆடினர். அணியின் ஸ்கோர் 79 ஆக உயரந்தபோது வில்லியம் சோமர்வில்லே 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனைத்தொடர்ந்து லாதமும், கேப்டன் கேன் வில்லியம்சனும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் முதல் இன்னிங்சை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதமடித்த லாதம் அணியின் எண்ணிக்கை 118 ஆக இருந்தபோது ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், 112 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்கள் எடுத்திருந்த கேன் வில்லியம்சன், டாம் ப்ளண்டெல் ஆகியோர் குறுகிய இடைவெளியில் அடுத்ததடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் ஜேமிசன் நிலைத்து நின்று ஆட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. இந்தச்சூழலில் ஜேமிசன் 30 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சௌதியும் ஒன்பதாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி வெற்றி உறுதி எனவே கருதப்பட்டது.

இருப்பினும் 10வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ரச்சின் ரவீந்திராவும், அஜாஸ் படேலும் கடைசி வரை விக்கெட்டை பறிகொடுக்கவில்லை. அதேநேரத்தில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக போட்டி ட்ராவில் முடிந்தது. ரச்சின் ரவீந்திராவும் 91 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்தும், அஜாஸ் படே 23 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் தங்கள் அணியை கரை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT