Skip to main content

நியூசிலாந்து தொடர்: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!

Published on 12/11/2021 | Edited on 12/11/2021


 

RAHANE PUJARA

 

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ள இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கெதிரான இருபது ஓவர் போட்டிகளில் விளையாடப்போகும் இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து தற்போது நியூசிலாந்திற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே வெளியான தகவல்கள் தெரிவித்தபடி, ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விராட் கோலிக்கு முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் விராட் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அணியில் இணைவதுடன் அணியை வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வருமாறு: ரஹானே (கேப்டன்), புஜாரா (துணை கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், விருத்திமான் சஹா, கே.எஸ். பாரத், ஜடேஜா, அஷ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

டெஸ்ட்டில் மீண்டும் ரஹானே; தேர்வுக்கு பின்னணியில் தோனி; வெளியான தகவல்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Rahane back in Test; Dhoni in the background for the selection; Released information

 

நடப்பு ஐபிஎல் தொடரில் ரஹானே தொடர்ந்து அசத்தி வருகிறார். கொல்கத்தா உடனான போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னை அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை மொயின் அலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். 

 

கொல்கத்தா உடனான போட்டியில் 29 பந்துகளில் 71 ரன்களைக் குவித்து 244 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய ரஹானே, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்ரேட் கொண்டவர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 5 இன்னிங்ஸில் 209 ரன்களை குவித்து 199.04 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தில் ரஹானே நீடிக்க 198.03 உடன் ஷர்துல் தாக்கூர் இரண்டாமிடத்தில் நீடிக்கிறார்.

 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய அணியும் அறிவித்தது. அதில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதால் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

 

டெஸ்ட் அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் தனது காலடியை ரஹானே பதிக்க உள்ளார். ரஹானே கடைசியாக இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய ரஹானே முதல் இன்னிங்ஸில் 49 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில், ரஹானே இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு பின்னணியில் தோனி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் ரஹானேவின் பெயரை சேர்ப்பதற்கு முன் பிசிசிஐ தேர்வாளர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டன் தோனியுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

முன்னதாக ரஹானே ரஞ்சி டிராபியில் 7 போட்டிகளில் விளையாடி 634 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 57 ரன்களை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.