ADVERTISEMENT

4 இன்னிங்ஸில் 38 ரன்கள் மட்டுமே எடுத்த கோலி!

12:11 PM Mar 01, 2020 | santhoshb@nakk…

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய தடுமாறி வருகிறது.

ADVERTISEMENT


2 ஆவது இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 24, விராட் கோலி 14 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். கிறைஸ்ட்சர்ச்சில் 2 ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் போட்டியில் நியூசிலாந்து அணியின் கையே ஓங்கியுள்ளது.

ADVERTISEMENT

முதல் இன்னிங்ஸில் இந்தியா 10 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களை எடுத்தது. அதேபோல் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டு டெஸ்டின் 4 இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 38 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். மேலும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 5 டி20, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே கோலி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT