ADVERTISEMENT

களத்தில் கெத்துக்காட்டும் நான்கு கம்பேக் வீரர்கள்!

12:59 PM Oct 18, 2018 | Anonymous (not verified)

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை ஒருமுறை அணியில் சேர்ந்துவிட்டால் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே படாதபாடு பட வேண்டியிருக்கிறது. புதிதாக வரும் வீரர்கள் கொஞ்சம் அதிரடி காட்டினாலே பெஞ்சில் உட்கார வைக்கப்படும் நிலையும் இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுத்ததோடு, அதிரடியாக விளையாடி ரசிகர்களின் மனதிலும் இடத்தில் இடம்பிடித்து கெத்துக்காட்டும் நான்கு வீரர்களை இந்த பதிவில் காண்போம்.

ADVERTISEMENT

ரவீந்திர ஜடேஜா

ADVERTISEMENT

சர் ஜடேஜா என செல்லமாக அழைக்கப்படும் இவர், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றிருக்கிறார். 2017, ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர், அதன்பிறகு அணியில் சேர்க்கப்படவே இல்லை. ஆசியக் கோப்பைத் தொடரில் ஹர்தீக் பாண்டியா, எஸ்.என்.தாகூர் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் காயத்தால் வெளியேற, அணியில் மீண்டும் இணைந்தார் ஜட்டு. கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே அசத்திய இவர், நான்கு விக்கெட் வீழ்த்தி 29 ரன்கள் மட்டுமே கொடுத்ததோடு, ஆட்ட நாயகனாகவும் தேர்வானார். அந்தப் போட்டியில் குல்தீப் யாதவ், சகால் ஆகிய இரு முக்கியமான ஸ்பின்னர்கள் விக்கெட்டே எடுக்காதது குறிப்பிடத்தக்கது.


தென் ஆப்பிரிக்க அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் இவர். காயம் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக விளையாடாத நிலையில், ஜிம்பாப்வே தொடரின் மூலம் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கிறார். கம்பேக் கொடுத்த முதல் போட்டியில் 60 ரன்கள் விளாசிய ஸ்டெயின், 2 விக்கெட் வீழ்த்தினார். 35 வயதான ஸ்டெயினுக்கு இதுவே தன் வாழ்நாளில் முதல் அரைசதமாகும்.

லிசித் மலிங்கா


இலங்கை கிரிக்கெட் அணியில் அன் ஆர்த்தடாக்ஸ் வகையிலான வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கி, கலக்கியவர் லசித் மலிங்கா. சரியாக இரண்டு வருடங்களுக்கும் மேலாக அணியில் இடம்பெறாத இவர், கனடாவில் நடந்த குளோபல் டி20 தொடரில் அதிரடியாக விளையாடினார். இதன்மூலம், அணியில் சேர்க்கப்பட்டு வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தினார். வெறும் நான்கு போட்டிகளில் இதுவரை 10 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். அதில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரே போட்டியில் எடுத்த ஐந்து விக்கெட்டுகளும் அடக்கம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது ஹஃபீஸ், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய அந்தத் தொடரில் சதமடித்து விளாசிய அவர், அதை மிக அழகாக கொண்டாடவும் செய்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT