Dayalan Hemalatha's interview

Advertisment

ஜியோ சினிமா மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பான மகளிர் பிரிமியர் லீக் போட்டியில் விளையாடும் தமிழக கிரிக்கெட் வீராங்கனை தயாளன் ஹேமலதா தன்னுடைய அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

தயாளன் ஹேமலதா பேசியதாவது “எதிரணி வீரர்கள் மற்றும் பிற வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை எதிர்கொள்வது மிகவும் உற்சாகமான அனுபவமாகும். ஏனெனில் அவர்கள் அனைவருடனும் போட்டியிட்டு விளையாடி வெற்றி பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் லாரா ஹரிஸ் மிகவும் அமைதியாக இருந்து விளையாட்டின் நுணுக்கங்களை தெளிவாக கணித்து ஆட்டத்தை விளையாடுவது என்னை மிகவும் ஈர்த்தது.

ஆஷ்லே கார்ட்னர், சோபியா டங்க்லி, மற்றும் கிம் கார்த் மிகவும் திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் நான் அவர்களுடன் மிகவும் நெருங்கி பழகுவதால் எனக்கு இவர்கள் அந்நியர்களாக தெரியவில்லை. இது எங்கள் அணிக்கு ஒரு பெரிய பலம் மற்றும் கூட்டணி மூலம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும். உண்மையில் எங்களிடம் 19 வயதுக்குட்பட்ட இளம் வீரர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அனுபவம் கொண்ட சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும்பேட்ஸ்மேன்கள் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் என்று தெரிகிறது .

Advertisment

17 வயது முதல் 18 வயது வரை நான் சிறுவர்களுடன் தெருவில்கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். அதன் பிறகு கிரிக்கெட் மீதானஎனது ஆர்வமே எனது தொழிலாக மாறியது. கடவுளின் கிருபையால் அது நன்றாகவே நடந்தது மற்றும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.

மகளிர் பிரிமியர் லீக் ஏலம் நடக்கும்போது நான் என் பெற்றோருடன் வீட்டில் இருந்தேன். ஏனெனில் நான் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் சேர்வேனா இல்லையா என்ற பதற்ற நிலைக்கு சென்றேன். பின் குஜராத் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த உடனே நான் மட்டுமில்லாமல் எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக மகளிர் கிரிக்கெட்டில் முக்கிய விளையாட்டு வீரர்களான நூதன் மற்றும் மிதாலி இருவரும் எனது கிரிக்கெட் விளையாட்டின் நுணுக்கங்களின் பணியை அறிந்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.