ADVERTISEMENT

மேரி கோம் வெண்கலம் வென்றார்... நடுவரின் முடிவால் இந்தியா அதிருப்தி!

01:09 PM Oct 12, 2019 | suthakar@nakkh…


11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவு போட்டிகளில் 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரி கோம், தாய்லாந்து மற்றும் கொலம்பிய வீராங்கனைகளை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை புசெனாஸை எதிர்கொண்டார் மேரி கோம். பரபரப்பான ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில், மேரி கோம் போராடி தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. போட்டியில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து இந்தியா மேல் முறையீடு செய்தது. ஆனால், அதனை குத்துச் சண்டை சம்மேளனம் நிராகரித்தது.

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோம் இதுவரை 6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என எட்டு பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். அரையிறுதியில் வெற்றி பெற்ற துருக்கி வீராங்கனை புசெனாஸ், நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரஷ்யா வீராங்கனை லிலியாவை எதிர்கொள்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT