ADVERTISEMENT

27 ஆண்டுகளில் யாரும் தொடமுடியாத சாதனையை முறியடித்த கிங் கோலி!

07:25 PM Feb 21, 2018 | Anonymous (not verified)

கடந்த 27 ஆண்டுகளில் யாரும் நெருங்கக்கூட முடியாத சாதனையை இந்திய அணியின் கேப்டன் கோலி படைத்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்க அணியுடனான ஆறு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணியின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். அதிலும் குறிப்பாக கேப்டன் விராட் கோலி அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இந்தத் தொடரில் 558 ரன்கள் அவர் அடித்திருந்தார். மேலும், ஒரே தொடரில் மூன்று சதங்கள் அடித்த ஒரே கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார். இதுமட்டுமின்றி, இந்தத் தொடரில் கோலி பல சாதனைகளை முறியடித்தும், புதிய சாதனைகளைப் படைத்தும் மெர்சல் காட்டியிருந்தார்.

இந்நிலையில், ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 27 ஆண்டுகளில் உலகில் எந்த வீரரும் தொடக்கூட முடியாமல் இருந்த 900 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க தொடருக்கு பின்னர் கோலியின் புள்ளிப்பட்டியல் 909ஆக உள்ளது. இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரெய்ன் லாரா 908 புள்ளிகளைப் பெற்றிருந்தார். மேலும், 50 ஓவர்கள் ஃபார்மேட்டில் 900 புள்ளிகளைக் கடந்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்துக்கு அடுத்த இடத்தில் 912 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT