தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

kohli about south africa series

Advertisment

Advertisment

இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஃபாலோ ஆன் அடிப்படையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அந்த அணி, அதிலும் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் முதன்முறையாக தென் ஆப்பிரிக்கா அணியை வைட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

போட்டிக்கு பிறகு வீரர்கள் தங்கும் ஓய்வு அறைக்கு வந்த மகேந்திர சிங் தோனி, வீரர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துகொண்ட ரவி சாஸ்திரி, அருமையான வெற்றிக்கு பின் இந்தியாவின் உண்மையான ஜாம்பவானை அவரது இடத்திலேயே பார்த்தது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். மேலும் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கோலியிடம், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு செய்தியாளரை கிண்டலடிக்கும் வகையில் பதிலளித்த கோலி, "தோனி ஓய்வு அறையில் தான் உள்ளார். வாருங்கள். வந்து அவருக்கு ஹலோ சொல்லுங்கள்'' என தெரிவித்தார்.