ADVERTISEMENT

அஸ்வின் செய்தது சரியா? தவறா? கொந்தளிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்...

01:33 PM Mar 26, 2019 | santhoshkumar

ரவிச்சந்திரன் அஸ்வின் கிட்டத்தட்ட பல மாதங்கள் கழித்து மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் விளையாடினார். அதுவும் பஞ்சாப் அணியின் கேப்டன் என்கிற அந்தஸ்துடன் நேற்று இரவு மொஹாலியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டார். முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் ஆட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் நிதானமாகவும் சிறப்பாகவும் ஆடினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பட்லர், 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் மன்கட் செய்து பட்லரை அவுட்டாக்கினார். எந்தவித வார்னிங்கும் இன்றி மன்கட் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நேற்று இரவிலிருந்து மன்கட் செய்தது குறித்து பலர் அஸ்வினை விமர்சித்தும், சப்போர்ட் செய்தும் வருகின்றனர். முதலில் மன்கட் என்பது தெருவில் விளையாடும் கிரிக்கெட்டில் இருந்தே பலருக்கு பரிச்சயமான ஒன்றாகவே இருக்கும். ஏனென்றால் அவுட்டாக்க முடியாத பேட்ஸ்மேனை அவ்வாறு அவுட்டாக்கி வெளியேற்றுவது கல்லி கிரிக்கெட்டில் வழக்கமான ஒன்றாக இருந்திருக்கும். அதிலும் ஒரு குறிப்பிட்ட வயதுவரை மன்கட் முறையை பயன்படுத்தியவர்கள் பின்னர் ஸ்பிரிட் ஆஃப் தி கேம் என்றெல்லாம் சொல்லி அதை தவிர்த்துவிடுவார்கள்.

மன்கட் அவுட்டின் வரலாற்றை தெரிந்துகொள்வோம். 1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில்தான் இந்த முறையில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அந்த ரன்னவுட்டை செய்த பவுலரின் பெயர் வினோ மன்கட். இந்த விக்கெட் முறையை அப்போதும் பலர் விமர்சித்தார்கள். ஆஸ்திரேலிய ஊடகங்கள் மிக கடுமையாகவே விமர்சித்தது. மன்கட் என்பவர் இந்த ரன்னவுட்டை செய்ததால் இந்த விக்கெட் முறைக்கு மன்கட் அவுட் என்றே அழைக்கப்படுகிறது. பௌலர் தனது பந்து வீசும் ஆக்சனைச் செய்து நான் ஸ்ட்ரைக்கர் பகுதியில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியே சென்றவுடன் , பௌலர் அவரை அவுட் செய்து கொள்ளலாம். அப்படி பௌலர் சரியாக அவுட் செய்துவிட்டால், இந்தப் பந்து அந்த ஓவரின் ஒரு பந்தாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மாறாக பௌலர் அவுட் செய்யவில்லை என்றால் இந்தப் பந்து டெட் பாலாக அறிவிக்கப்படும்.

இந்த மன்கட் முறையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் என்று சொல்லப்படும் கபில் தேவும் செய்திருக்கிறார். பல வீரர்கள் இந்த முறையில் அவுட் செய்திருக்கிறார்கள். தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள அஸ்வினே ஒரு முறை சிபி சீரிஸில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த போட்டியில், திரிமன்னேவை அவுட் செய்தார். இந்திய அணியின் மூத்த வீரர்களின் அறிவுறுத்தலின் பேரில் வாபஸ் பெறப்பட்டது. இவ்வளவு ஏன் , நேற்று அவுட்டாகிய ஜோஸ் பட்லரும் 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மன்கட் முறையில் அவுட் ஆக்கப்பட்டுள்ளார். சசித்ர செனநய என்ற பௌலரால் மன்கட் முறையில் அவுட் செய்யப்பட்டார். அப்போது இந்தத் தொடரின் போது ஜாஸ் பட்லர் அவுட் செய்வதற்கு முன் பல முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இங்கிலாந்து வீரர்கள் இதனை நேர்மையான முறையல்ல என்றனர். இன்றும் இந்த ரன்னவுட் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அதேபோல சர்ச்சைகளும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

சமூக வலைதளங்களில், அஸ்வின் பந்து வீச வரும்போது பட்லர் கிரீஸ் லைனுக்குள்தான் நிற்கிறார். அவர் வெளியே செல்லும் வரை அஸ்வின் வெயிட் செய்து மன்கட் செய்துள்ளார் என்று விமர்சிக்கின்றனர். ஆனால், 2017ஆம் ஆண்டின் கிரிக்கெட் விதியை புதுப்பத்திலின்படி பார்த்தால் இது சரியான அவுட்டே. நான் ஸ்டைரைக்கரில் நிற்கும் வீரர் பவுலர் பந்து வீசிய பின்னே கிரீஸ் லைனை விட்டு வெளியேற வேண்டும். பந்து வீசுவதற்கு முன்பு கிரீஸ் லைனை விட்டு வெளியேறினால் பவுலர் ஸ்டம்பில் அடித்து ரன்னவுட்டாக்கலாம் என்று விதி மாற்றப்பட்டுவிட்டது. ஆகையால் இது ஐசிசி விதியில் இருக்கிறது என்று அஸ்வினை விமர்சிப்பவர்களை இப்படி விமர்சிக்கிறார்கள். எது என்னவோ அஸ்வின் செய்தது சரியா, தவறா என்பதை தாண்டி நேற்றைய ஆட்டத்தில் அந்த விக்கெட்தான் போட்டியையே மாற்றியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் இதுதான் முதல் முறை மன்கட். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஐசிசி விதியின் படி இது சரியான ஒன்று. ஜெண்டில்மேன் கிரிக்கெடின் படி இது... ?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT