ipl match rajasthan royals vs kings eleven punjab teams

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisment

அபுதாபியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்து விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ்கெய்ல் 99 ரன்கள், கே.எல்.ராகுல் 46 ரன்கள், பூரன் 22 ரன்கள் எடுத்தனர்.

Advertisment

ipl match rajasthan royals vs kings eleven punjab teams

பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 50 ரன்கள், சஞ்சு சாம்சன் 48 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்கள் எடுத்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.