ADVERTISEMENT

கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

09:09 AM Oct 30, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

துபாயில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக நிதிஸ் ராணா 87, சுப்மன் கில் 26, தினேஷ் கார்த்திக் 21 ரன்களை எடுத்தனர்.

பின்னர், 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் (178/4) இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 72, அம்பத்தி ராயுடு 38, ரவீந்திர ஜடேஜா 31 ரன்கள் எடுத்தனர்.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில், அபுதாபியில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT