ADVERTISEMENT

முதல் தோல்வியில் இருந்து மீளப்போவது டெல்லியா? ராஜஸ்தானா? - ஐபிஎல் போட்டி #6

06:38 PM Apr 11, 2018 | Anonymous (not verified)

ஐபிஎல் சீசன் 11ன் ஆறாவது போட்டியில் டெல்லி, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதும் போட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த தொடக்கத்தைத் தந்து, வந்த வேகத்திலேயே பின்வாங்கிய ராஜஸ்தான் அணி, அடுத்தடுத்த தொடர்களில் பிரகாசிக்காமலேயே போனது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் தொடருக்கு வந்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது முதல் போட்டியிலேயே மிக மோசமாக மண்ணைக் கவ்வியதே அதற்கு சான்று.

அதேசமயம், இதுவரை பிரபல அணிகள் என்ற பட்டியலில் ஒருமுறை கூட ஜொலிக்காத டெல்லி அணி, கொல்கத்தா அணியின் அசத்தல் கேப்டனும், சொந்த ஊர்க்காரருமான கம்பீருடன் வலுவான நிலையில் களமிறங்கியது. இருந்தாலும், பஞ்சாப் அணியுடனான முதல் போட்டி அந்த அணிக்கு எல்லா எதிர்பார்ப்புகளையும் நொறுக்கித் தீர்த்து ஏமாற்றத்தையே பதிலாக அளித்தது.

இந்நிலையில், தங்களது முதல் போட்டியிலேயே படுமோசமாக தோற்ற இரண்டு அணிகளும் இன்று மோதுகின்றன. தோல்வி முகத்தை மாற்ற இந்த இரண்டு அணிகளுமே முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், தடை தளர்ந்து மீண்டும் சொந்த மண்ணில் விளையாட இருக்கும் ராஜஸ்தான் அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே, இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT