ADVERTISEMENT

சென்னையா, ஹைதராபாத்தா யாருக்கு கோப்பை, வீரர்களின் நிலை என்ன???

06:41 PM May 26, 2018 | santhoshkumar

ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி ஆரம்பித்தது, அந்தத் தொடரின் கடைசி போட்டியான கிராண்ட் பைனல் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கிறது. அதுவும் இந்த ஆண்டின் சிறந்த அணிகளாக திகழும் இரு அணிகளுக்கிடையே நடக்கும் போட்டி இது. இந்த ஆண்டின் சிறந்த சேஸ் செய்யும் அணிக்கும், சிறந்த பந்துவீசும் அணிக்கும் இடையே நடக்கும் போராக இன்றைய ஆட்டம் இருக்கும். பதினோராம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை இன்று யார் வெல்லப் போகிறார்கள் என்று இன்றிரவுதான் தெரியும், ஆனால் கண்டிப்பாக 100 சதவீத பொழுதுபோக்குக்கு கண்டிப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நடக்க இருக்கும் பைனலை பற்றிய ஒரு சின்ன அலசலை பார்ப்போம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேன் வில்லியம்சன் vs லுங்கி இங்கிடி
இந்த வருடத்திற்கான போட்டித் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் என்று கேன் வில்லியம்சன்னை சொல்லிவிடலாம். ஆரஞ்சு தொப்பியும் அவர் வசமே இருக்கிறது. இந்த பதினோராவது ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை பெற்று முதலிடத்தில் இருக்கும் வீரர் அவர். இதுவரை 688 ரன்கள் பெற்றிருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் சிறந்த பந்துவீச்சாளராக பார்மில் இருக்கும் லுங்கி இங்கிடியை சமாளித்து ஆட வேண்டும். இல்லை என்றால் தொடக்கத்தில் சிரமம் ஏற்படும். இந்த உயர்ந்த தென் ஆப்ரிக்க வீரர் சிஎஸ்கே கண்டெடுத்த முத்து. ஆறு போட்டிகளில் பத்து விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே ஒரு ரிதத்துடன் பந்து வீசினாரென்றால் கண்டிப்பாக எஸ்.ஆர்.எச். வீரர்கள் அதிகளவு சிரமத்தை எதிர் நோக்குவர்.


ரஷீத் கான் vs எம்.எஸ். தோனி
களத்தில் இந்த இருவருக்குமான போட்டி என்பது கண்டிப்பாக பார்ப்பவர்களை வாய் பிளக்க வைக்கும். கடைசியாக இவ்விருவரும் சந்தித்துக்கொண்ட குவாலிபையர் முதல் சுற்றில் ஆப்கான் சுழற்பந்து வீச்சாளருக்கே வெற்றி கிடைத்தது. தோனி, லெக் ஸ்பின்னில் வீக் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆதனால் அவரை சமாளிக்க ரஷித்தையே ஆயுதமாக பயன்படுத்துவார்கள். எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா அணியுடன் வெற்றிபெற காரணமாக இருந்தவரும் இவரே. ஆகையால் அந்த ஒரு எனர்ஜியும் இருக்கக்கூடும்.

தீபக் சாஹர் vs ஷிகர் தவான்
தீபக் சாஹர், சிஎஸ்கேவின் நியூபால் பவுலராக இருக்கிறார். இரண்டு ஸ்விங்குகளும் போடுவதால், தொடக்கத்தில் இவரது பந்துகளை அடிப்பது, கொஞ்சம் கடினமாகவே இருக்கும். கடந்த போட்டியில் கூட தவானை முதல் பந்திலேயே போல்டாக்கினார்.
தவான் அவரது அணிக்கான நல்ல அடித்தளத்தை அமைக்கவில்லையென்றால் கண்டிப்பாக அவர்களால் நல்ல ஸ்கோரை டார்கெட்டாக வைக்க முடியாது. தீபக் 11 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். தவான் 15 போட்டிகளில் 471 ரன்கள் அடித்திருக்கிறார்.

அம்பத்தி ராயுடு vs ஷாகிப் அல் ஹசன்
ராயுடு, முன்னாள் சாம்பியன்களிடம் இருந்து சென்னை அணிக்கு தாரைவார்க்க பட்ட வீரர். யாரும் எதிர்பார்க்காத வகையில் தோனி அவரை தொடக்க வீரராக களம் இறக்கினார். அதற்கு கிடைத்த பதில்தான் அவரது ஸ்கோர் 586 ரன்கள். இதில் ஒரு சென்ச்சூரியும், இரண்டு ஆப் சென்ச்சூரியும் அடக்கம்.
ஷாகிப் அவருடைய வேலையான ஆல் ரவுண்டர் வேலையை சரியாக செய்துகொண்டிருக்கிறார். ரன்கள் வேகமாக போய்க்கொண்டிருக்கும்போது அதை கண்ட்ரோல் செய்வதும் இவரே, பேட்டிங்கில் யாரும் அடிக்கவில்லையென்றால் ரன்களை வேகமாக சேர்ப்பதும் இவரே ஆகமொத்தத்தில் இவர் நல்ல ஃபார்மில் ஆடுகிறார்.

புவனேஷ் குமார், சித்தார்த் கவுல் vs ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா
வாட்சன் தோனி இவர்களுடன் ஆடும் போது, நன்றாகவே ஆடி வருகிறார், நல்ல தொடக்கத்தை ஏற்படுத்துகிறார் ரெய்னா. தொடக்கம் சரியாக இல்லை என்றால் அவர் உள்ளே வந்து நிலையாக நின்று நல்ல ஸ்கோர்கள் பெற்றுத்தர உதவியாக இருக்கிறார்.

புவனேஷ்வர் குமார் இந்த ஆண்டு 9 விக்கெட்டுகளையே எடுத்து இருக்கிறார் என்றாலும், அவருடைய கடைசி ஓவர்களும், அதிக ரன்கள் தராத பவுலிங்கும் ஆட்டத்திற்கு உதவுகிறது. கவுல், இந்த வருடம் அவருக்கானது என்றே சொல்லலாம். 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் இதுவரை எடுத்திருக்கிறார். கடைசியாக நடந்த சிஎஸ்கே மேட்சில் கூட சிஎஸ்கே ரன்கள் சேர்ப்பதை சிரமத்திற்குள்ளாகியதும் இவர்தான்.

இன்றைய ஆட்டம் நகங்களை கடித்துக்கொண்டு... ஏன், டிவிக்குள் தலையைவிட்டு பார்க்கும் அளவிற்குகூட சுவாரசியமாக இருக்குமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT