ADVERTISEMENT

டி20 தொடரில் நடந்தது இன்று நடக்குமா? - இங்கிலாந்துடன் பலப்பரீட்சை!

12:25 PM Jul 14, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி மாலை 3.30 மணி முதல் நேரலையாக ஒலிபரப்பாகும்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஏற்கெனவே டி20 போட்டியில் 2 - 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5 - 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்த உலகின் நம்பர் ஒன் அணியான இங்கிலாந்து, தற்போது இந்திய அணியின் ஆட்டத்தில் திணறிக் கொண்டிருக்கிறது. ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் ஏற்கெனவே 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரைத் தக்கவைக்கும் எண்ணத்தில் இங்கிலாந்தும் இருக்கிறது. டி20 தொடரில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. அது இன்று நடந்தால் இங்கிலாந்து அணிக்கு தொடரில் நீடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT