இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

wasington

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு அயர்லாந்து அணியுடன் 2 டி20 போட்டிகளிலும், இங்கிலாந்து அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில், இன்று அயர்லாந்துக்கு எதிராக நடக்கவிருக்கும் டி20 போட்டியை முன்னிட்டு, இந்திய அணி குழுக்களாக பிரிந்து பயிற்சி மேற்கொண்டது.

Advertisment

அப்போது தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், நடக்க முடியாமல் சுருண்டுவிழுந்த அவரை பிஸியோக்கள் அழைத்துச் சென்றனர். தற்போதுவரை அவரது காயத்தின் தன்மை குறித்து பிசிசிஐ தரப்பு தெரிவிக்கவில்லை. ஒருவேளை தவிர்க்க முடியாத சூழலில் வாஷிங்டன் சுந்தர் இந்தியா திரும்பினால், அவருக்குப் பதிலாக இந்தியா ஏ அணியில் இருந்து ஆல்ரவுண்டர்களாகிய க்ருணால் பாண்டியா, அக்ஸர் படேல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகிய மூவரில் ஒருவர் இந்திய அணியில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.