ADVERTISEMENT

மீண்டும் சுழலில் சுருண்ட இங்கிலாந்து! - அதிர்ச்சி தொடக்கம் கண்ட இந்தியா!

04:29 PM Mar 04, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா-இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி, இந்தப் போட்டியை வெல்லவோ, ட்ரா செய்யவோ வேண்டும். இதனால், இந்தப் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக உருவெடுத்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

இருப்பினும் ஆரம்பத்திலேயே இங்கிலாந்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் அக்ஸர் படேல் ஆட்டமிழக்கச் செய்தார். இங்கிலாந்து கேப்டன் ரூட், 5 ரன் எடுத்த நிலையில், சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், ஒரு கட்டத்தில் அந்த அணி 30- ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரைசதமடித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. அதேநேரம், டேனியல் லாரன்ஸ் 46 ரன்கள் அடித்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் அக்ஸர் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும் அதிர்ச்சித் தொடக்கம் கண்டது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தற்போது, ரோகித் சர்மாவும், புஜாராவும் களத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT