rohit sharma

Advertisment

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட்போட்டி, சென்னையில் இன்று (13.02.2021) தொடங்கியது. இப்போட்டிக்கான இந்தியஅணியில் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அக்ஸர் படேலும்,ஷாபஸ் நதீம்நீக்கப்பட்டு குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டனர். ஜஸ்பிரிட் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டு, சிராஜ்சேர்க்கப்பட்டார்.

இந்தப் போட்டியில்டாஸ்வென்றஇந்தியகேப்டன்விராட்கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து ரோகித்தும், சுப்மன் கில்லும்களமிறங்கினர். சுப்மன் கில் டக் - அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இருப்பினும் மறுபக்கம்ரோகித்சர்மா, ஒருநாள் போட்டியில் ஆடுவதுபோல அதிரடியாக ஆடினார். இதனால் அணியின்ரன் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது. அதேநேரத்தில், புஜாரா21 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி ரன்எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து உணவு இடைவேளையில்இந்திய அணி 103 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரோகித்சர்மா78 பந்துகளில் 80 ரன்கள்எடுத்து களத்தில் உள்ளார்.