ADVERTISEMENT

விடாது துரத்தும் சூப்பர் ஓவர் சோதனைகள்... நான்காவது போட்டியிலும் நியூஸிலாந்து தோல்வி...

04:59 PM Jan 31, 2020 | kirubahar@nakk…

இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியிலும் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பந்த்துவீச முடிவெடுத்தது நியூஸிலாந்து அணி. தொடக்கம் முதலே குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் எடுத்தது. அபாரமாக விளையாடிய மணீஷ் பாண்டே 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். 166 ரன்கள் என்ற என்ற வெற்றி இலக்குடன் விளையாட தொடங்கிய நியூஸி. அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது. ஆட்டம் சமனில் முடிந்த காரணத்தால் கடந்த போட்டியை போலவே இந்த போட்டியும் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 13 ரன்கள் எடுத்தது. 14 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராகுல் முதல் பந்தில் சிக்ஸர், இரண்டாவது பந்தில் பவுண்டரி விளாசினார். மூன்றாவது பந்தில் ராகுல் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். நான்காவது பந்தில் கோலி இரண்டு ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் கோலி பவுண்டரி விளாச இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT