ADVERTISEMENT

இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர்; இந்திய அணியில் யார் யார்?

10:53 AM Mar 19, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது இரு அணிகளுக்குமிடையே இருபது ஓவர் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இரு அணிகளும் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ளன.

மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக வீரர் நடராஜன் அணிக்குத் திரும்பியுள்ளதோடு, சில புதுமுக வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். தற்போது நடைபெற்று வரும், இருபது ஓவர் தொடரில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடிவரும் பிரசீத் கிருஷ்ணா, இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ரிஷப் பந்த் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார். இதுவரை இந்தியாவிற்காக இருபது ஓவர் போட்டிகளில் மட்டுமே ஆடிய க்ருனல் பாண்டியா, காயத்தால் அணியில் இடம்பெறாமல் இருந்து வந்த ஹார்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

இங்கிலாந்திற்கு எதிரான இந்திய அணி வருமாறு: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், சாஹல், குல்தீப் யாதவ், க்ருனல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, ஷார்துல் தாக்கூர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT