K PANDYA KL RAHUL

Advertisment

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயானமுதலாவது ஒருநாள் போட்டி, புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்துகளமிறங்கிய ரோகித்-தவான் இணை பொறுமையாக ரன்களைசேர்த்தது. ரோகித் சர்மா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்துதவான் - விராட் இருவரும் இணைந்து ரன்களைசேர்த்தனர்.

விராட் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய தவான், துரதிருஷ்டவசமாக 98 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். ஒருபக்கம்கே.எல் ராகுல் அதிரடியாக ஆட மறுபக்கம் ஸ்ரேயஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய க்ருனால் பாண்டியா, அதிரடியாக ஆடி ரன்களைஉயர்த்தினார்.

கே.எல் ராகுல் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரின் சிறப்பானஆட்டத்தால், இந்திய அணி ஐம்பது ஓவர் முடிவில் 317 ரன்களைகுவித்தது. க்ருனால் பாண்டியா 31 பந்துகளில் 58 ரன்களோடும், கே.எல் ராகுல் 43 பந்துகளில் 62 ரன்களும்குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.