ADVERTISEMENT

வெண்கலத்திற்காக ஜெர்மனியுடன் மோதப்போகும் இந்திய அணி!

06:34 PM Aug 03, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். பி.வி. சிந்து வெண்கலம் வென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று (03.08.2021) நடைபெற்ற ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில், இந்தியாவும் பெல்ஜியமும் மோதின. இதில், பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ட்ரிக்ஸ் ஹாட்ரிக் கோல் அடிக்க, அந்த அணி 5 - 2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. அதேபோல் இன்னொரு அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா ஜெர்மனியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது.

இதனையடுத்து அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியாவும் ஜெர்மனியும் வெண்கலத்திற்காக மோதவுள்ளன. இதற்கிடையே இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஷாட் புட் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தகுதி சுற்றிலேயே வெளியேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நாளை நடைபெறவுள்ள ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி, தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள அர்ஜெண்டினா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி நாளை மாலை 3.30 மணிக்குத் தொடங்கவுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT