ADVERTISEMENT

சச்சின் டெண்டுல்கருக்கு "ஹால் ஆஃப் பேம்" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி! (வீடியோ, படங்கள்)

02:17 AM Jul 20, 2019 | santhoshb@nakk…

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஐசிசி "ஹால் ஆஃப் பேம்" விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு "ஹால் ஆஃப் பேம்" விருது வழங்கி கவுரப்படுத்தியது ஐசிசி.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சச்சினுடன் மேலும் மூன்று பேருக்கு "ஹால் ஆஃப் பேம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு, ஆஸ்திரேலியா கேத்ரின் ஆகியோருக்கும் இந்த விருது கொடுக்கப்பட்டது. ஐசிசி 'ஹால் ஆஃப் பேம்' விருதை கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் சச்சினுக்கு முன் 'ஹால் ஆஃப் பேம்' விருது பெற்ற 5 வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம். பிஷன் சிங் பேடி (2009), சுனில் கவாஸ்கர் (2009), கபில் தேவ் (2009), அனில் கும்ப்ளே (2015), ராகுல் டிராவிட் (2018) ஆகியோர் பெற்றுள்ளனர்.

மேலும் சச்சினின் கிரிக்கெட் வரலாறு குறித்த இரண்டு வீடியோக்களை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதே போல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT