இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் சாகிப் அல் ஹசன். சிறந்த பந்துவீச்சு, தேர்ச்சி பெற்ற பேட்டிங் என அனைத்து போட்டிகளிலும் வங்கதேச அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.

Advertisment

shahib al hassan may break sachin's 15 years old worldcup record

இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் அவர், நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் 50 ரன்கள் எடுத்ததுடன், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவை இரண்டையும் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் செய்த யுவராஜ் சிங்கின் சாதனையை ஐவரும் தற்போது படைத்துள்ளார். யுவராஜிற்கு பிறகு இந்த சாதனையை செய்த இரண்டாவது நபர் இவரே ஆவார்.

இந்த நிலையில் ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் சேர்த்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சாகிப் அல் ஹசன் தற்போது நெருங்கி வருகிறார். கடந்த 2003 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின் 11 இன்னிங்ஸில் 673 ரன்கள் சேர்த்ததே இதுவரை சாதனையாக உள்ளது.

Advertisment

இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் சாகிப் அல் ஹசன், 6 இன்னிங்ஸில் விளையாடி 2 சதங்களுடன் 476 ரன்கள் சேர்த்து தொடர்ந்து அசத்தி வருகிறார். அரையிறுதி வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இன்னும் 3 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் சச்சின் சாதனையை முறியடிக்க இவருக்கு இன்னும் 198 ரன்களே தேவைப்படுகிறது. ஒரு வேலை வங்கதேச அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றால் சச்சினின் சாதனையை இவர் கண்டிப்பாக முறியடிப்பார் என கணிக்கப்படுகிறது.