ADVERTISEMENT

கோபமாக இருந்தது ஏன்? கெயில் விளக்கம்!

12:49 PM Oct 19, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது, பஞ்சாப் அணி வீரர் கெயில் களத்தில் கோபத்துடன் நடந்து கொண்டது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.

13-வது ஐ.பி.எல் தொடரின் 36-வது லீக் போட்டியில், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி, 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 176 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி,, 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுக்க, போட்டி சமநிலையில் முடிந்தது.

பின் வெற்றியைத் தீர்மானிக்க நடந்த சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிய, மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான கெயில், நேற்றைய போட்டியின் போது களத்தில் கோபமாக நடந்து கொண்டார். இந்நிலையில், கெயில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

"களத்தில் பதட்டமாக இல்லை. ஆனால், நேற்றைய ஆட்டத்தின் போக்கு சற்று கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இது கிரிக்கெட்டில் நடப்பது, இயல்பானதுதான். என்னைப் பொறுத்தவரை ஆட்டநாயகன் ஷமிதான். ரோகித் ஷர்மா மற்றும் டி காக்கிற்கு எதிராக பந்து வீசி 6 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவது என்பது பெரிய விஷயம்". இவ்வாறு கெயில் பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT