ADVERTISEMENT

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாகிறார் கவுதம் கம்பீர்!

03:53 PM Mar 07, 2018 | Anonymous (not verified)

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் முதல் மூன்று சீசன்களில் கவுதம் கம்பீர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பின்னர், கொல்கத்தா அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு ஏழு ஆண்டுகள் விளையாடினார். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு, இரண்டு முறை கோப்பை வெல்வதற்கும் காரணமாக இருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த ஆண்டு கொல்கத்தா அணி கவுதம் கம்பீரைத் தக்கவைக்கவோ, ஏலத்தில் மீண்டும் எடுக்கவோ முயற்சி செய்யாத நிலையில், அவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.2.8கோடி ஏலத்திற்கு எடுத்தது. இந்நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் செயல்படுவார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், ‘டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் தேர்வாகி இருப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் டெல்லி அணிக்கு திரும்பவேண்டும் என்று நினைத்தேன். அணி அதை நிறைவேற்றியது. இந்தப் பொறுப்போடு என் விளையாட்டை மீண்டும் மீட்டெடுப்பேன் என்று நம்புகிறேன். தற்போது நம்மிடம் இருப்பது மிகச்சிறந்த வீரர்களைக் கொண்ட அணி’ என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT