ADVERTISEMENT

பால் டேம்பரிங் : கேப்டன் சண்டிமாலின் அப்பீல் நிராகரிப்பு!

12:31 PM Jun 23, 2018 | Anonymous (not verified)

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தடைவிதிக்கப்பட்ட தினேஷ் சண்டிமாலின் மேல்முறையீட்டை ஐசிசி நிராகரித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் செயிண்ட் லூயிஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியிருக்கலாம் என நடுவர்கள் சந்தேகித்தனர். பின்னர் போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் தினேஷ் சண்டிமாலுடன் நடத்திய விசாரணையில், அவரது பதிலில் திருப்தி இல்லாததால், போட்டி சம்பளத்தில் 100 சதவீதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.


விளையாட்டின்போது இனிப்பான பொருளை வாயில் போட்டு மென்று, அதன் எச்சிலால் பந்தின் தன்மையை மாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தினேஷ் சண்டிமால் தனது தடையை எதிர்த்து ஐசிசி-யிடம் மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பாக ஐசிசி நிர்ணயித்த விசாரணை அதிகாரி மைக்கேல் ஃபிலிப் நடத்திய விசாரணையில் தினேஷ் சண்டிமால் கலந்துகொண்டார். சுமார் 4 மணிநேரம் நடந்த இந்த விசாரணையில், திருப்தி இல்லாததால், மைக்கேல் ஃபிலிப் முன்னர் விதித்த தடையை நீட்டித்தார். இதனால், இன்று பார்படாஸில் நடக்க இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் சண்டிமால் பங்கேற்க மாட்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT