ADVERTISEMENT

தோனிதான் ரியல் யுனிவெர்சல் பாஸ்! - மெர்சலான மேத்யூ ஹெய்டன் 

04:25 PM Apr 26, 2018 | Anonymous (not verified)

தோனிதான் ரியல் யுனிவெர்சல் பாஸ் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹெய்டன் பாராட்டியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன், ரெய்னா, பில்லிங்ஸ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து வெளியேற, தோனி - ராயுடு இணை அணியை வெற்றியை நோக்கி கூட்டிச் சென்றது. அம்பத்தி ராயுடு 53 பந்துகளில் 8 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 82 ரன்களும், கேப்டன் தோனி 34 பந்துகளில் 7 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 70 ரன்களும் விளாசினர். கடைசி இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில், கேப்டன் தோனி சிக்ஸருடன் அணியை வெற்றிபெறச் செய்தார்.

இதுகுறித்து சென்னை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹெய்டன் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘அடக் கடவுளே.. என்னை தூங்கவிடு.. ஏன் சென்னை சூப்பர் கிங்ஸை இவ்வளவு அற்புதமான அணியாக உருவாக்கினாய்? ரியல் யுனிவெர்சல் பாஸ் தோனி மற்றும் மிஸ்டர் ஐஸ்மேன் அம்பத்தி ராயுடுவின் ஆட்டம் இந்த ஐபிஎல் சீசனை உற்சாகமானதாக மாற்றிவிட்டது. என்னால் தூங்கமுடியாது.. விசில் போடு’ என உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில்தான் யுனிவெர்சல் பாஸ் என அழைக்கப்படுவார். ஆனால், இங்கு மேத்யூ ஹெய்டன் தோனியை ரியல் யுனிவெர்சல் பாஸ் என அழைத்திருப்பது தோனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT