ADVERTISEMENT

சாதனைப் பட்டியலில் இணைந்த தேவ்தத் படிக்கல்!

05:31 PM Oct 29, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய அணியில் அறிமுகமாகாமல் ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் 400 ரன்கள் அடித்த வீரர்கள் என்ற பட்டியலில் தேவ்தத் படிக்கல் இணைந்துள்ளார்.

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பெங்களூரு அணியைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய தேவ்தத் படிக்கல், பெங்களூரு அணி விளையாடியுள்ள 12 போட்டிகளிலும் களமிறங்கி 4 அரை சதங்களுடன் 417 ரன்கள் குவித்துள்ளார். தேவ்தத் படிக்கல், இந்திய அணிக்கு அறிமுகமாகாமல் இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியவீரர் ஆவார்.

2015-ம் ஆண்டு டெல்லி டேர்வில்ஸ் அணிக்காக விளையாடிய போது ஷ்ரேயாஸ் ஐயர், இச்சாதனையை முன்னர் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT