ADVERTISEMENT

சாதனைப் பட்டியலில் இணைந்த டேவிட் வார்னர்!

01:58 PM Nov 04, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐபிஎல் தொடரில் 500 பவுண்டரிகள் அடித்த வீரர்கள் என்ற சாதனைப்பட்டியலில் ஹைதராபாத் அணியின் கேப்டனான டேவிட் வார்னர் இணைந்துள்ளார்.

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஹைதராபாத் அணியின் கேப்டனான டேவிட் வார்னர் 58 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 85 ரன்கள் குவித்தார். ஐபிஎல் தொடரில் அவர் அடித்த மொத்த பவுண்டரிகளின் எண்ணிக்கையானது 507-ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, ஐபிஎல் தொடரில் 500 பவுண்டரிகள் அடித்த வீரர்கள் என்ற பட்டியலில் மூன்றாவது வீரராக டேவிட் வார்னர் இணைந்துள்ளார். ஷிகர் தவானும், விராட் கோலியும் முறையே இச்சாதனையைப் படைத்த முதல் இரு வீரர்களாக இப்பட்டியலில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT